‘மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கமல்ஹாசன் நேரடியாக களத்திற்கு வந்து தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை விளக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.
கோவை தெற்கு எம்.எல் ஏவும், பாஜகவின் மூத்த தலைவருமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கோவை தெற்கு தொகுதியில் மக்களை சந்தித்து கமல்ஹாசன் குறைகளைக் கேட்டுள்ளார். கழிப்பறை கட்டி தருகிறேன், சுத்தம் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
நான் வேண்டுமானால் எந்த வார்டில் பொது கழிப்பிடங்கள் இருக்கிறது.எத்தனை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது என்று பட்டியல் தருகிறேன்.பொதுமக்களிடம் கமல்ஹாசன் மனு வாங்கக் கூடாது என்று தாம் சொல்லவில்லை என்றும் தாராளமாக வாங்கலாம் ஆனால் அதனை வாங்கிக் கொண்டு போய் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தீர்வு வழங்கலாம் என கமல் நினைக்கக் கூடாது.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கமல்ஹாசன் நேரடியாக களத்திற்கு வந்து தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை விளக்க வேண்டும். கமல்ஹாசன், உதயநிதிக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார். உதயநிதியோடு படம் சம்பந்தமாக பேசும்போது, கோவை தெற்கு தொகுதி பிரச்சினையைக் பற்றி பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் செய்திகளுக்கு..60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
ஏனெனில், அமைச்சர்களைவிடவும், அதிகாரம் மிக்கவராக இருப்பவர் உதயநிதிதான். சட்டப்பேரவையில் முதல்வருக்கு வணக்கம் தெரிவிப்பதை விட உதயநிதிக்குதான் அனைவரும் முதலில் வணக்கம் தெரிவிக்கிறார்கள்’ என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?