சித்துவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க சொல்லி வற்புறுத்தினார் பாகிஸ்தான் பிரதமர்... காங்கிரசை அலறவிட்ட அமரீந்தர்

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2022, 10:40 AM IST
Highlights

சித்து திறமையற்றவர், பயனற்றவர், சிந்து அமைச்சர் ஆவதற்கு தகுதியற்றவர் என மேலும் அமர்சிங் சித்துவை விமர்சித்துள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சர்வே குறித்து சண்டிகரில் நவ்ஜோத் சித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமரீந்தர் சிங்கின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த சித்து, இது இன்றைய பிரச்சனை அல்ல என்றார். 

சித்துவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க சொல்லி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிபாரிசு செய்தார் என பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் லோக் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தகவல் தெரிவித்ததாகவும் ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேசப்பற்றுக்கும், போராட்ட குணத்துக்கும் பெயர் பெற்ற மாநிலம் பஞ்சாப். தமிழக மக்களைப் போலவே பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநிலமாக இருந்து வருகிறது பஞ்சாப். இந்தியாவிலேயே காங்கிரஸ் வலுவாக காலூன்றி நிற்கும் மாநிலங்களில் பஞ்சாப் முதன்மையாது. ஆனால் தேர்தலுக்கு முன்பாக அக்காட்சியில் நடந்த அதிகாரப் போட்டியின் காரணமாக தற்போது காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் கலகலத்துள்ளது. அங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங்குக்கும் இடையே பல மாதமாக பனிப்போர் நீடித்த நிலையில், சித்து அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க தேவையான காய்களை நகர்த்தினார். சுமார் 60-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் பதவியிலிருந்து அமர்சிங் நீக்கப்பட வேண்டும் என சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். இதனையடுத்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி சித்துவுக்கு வழங்கப்பட்டது. இதனால் வெறுப்படைந்த அமரீந்தர் சிங்  கட்சியிலிருந்து விலகினார்.

அவருக்கு மாற்றாக சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது, காங்கிரசிலிருந்து விலகிய கையோடு அமரீந்தர் சிங் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படது ஆனால் ஆவரோ லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அமரீந்தர் சிங் கட்சியில் இருந்து விலகி இருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். அவரது கட்சிக்கு 31 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. பாஜகவை காட்டிலும் காங்கிரசை எதிர்ப்பதில் லோக் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ள அவர், அக்கட்சியின் மீதும், அக்கட்சித் தலைவர்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் அமரீந்தர் சிங் டெல்லியில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது நவ்ஜோத் சிங்கின் நெருங்கிய நண்பரும் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கான் பஞ்சாப் மாநிலத்தில் சிந்துவை அமைச்சராக வேண்டுமென சிபாரிசு  செய்ததாகவும், இம்ரான் தனக்கும் சித்துவுக்கும் தெரிந்த பொது நண்பர் மூலம் இந்த செய்தியை தனக்கு அனுப்பியதாகவும், அதைக் கேட்டு  அதிர்ச்சி அடைந்த தான் அது குறித்து சோனியாவுக்கும், ராகுல் காந்திக்கும் அதை தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் சித்துவுக்கு சிபாரிசு செய்வதை கேள்விப்பட்டு தான் ஆச்சரியப் பட்டதாகவும், இம்ரான் கானுக்கு சித்துவுடன் நெருங்கிய நட்பு உண்டு, அதனால் அவர் சித்துவை  அமைச்சராக்க விரும்பினார் என்றும் கேப்டன் அமரீந்தர் சிங் பகீர் கிளப்பியுள்ளார். அவரின் இந்த தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து சோனியா காந்தியிடம் கூறியபோது அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை, அதே நேரத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி இது முட்டாள்தனமானது என  கூறியதாகவும், அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

சித்து திறமையற்றவர், பயனற்றவர், சிந்து அமைச்சர் ஆவதற்கு தகுதியற்றவர் என மேலும் அமர்சிங் சித்துவை விமர்சித்துள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சர்வே குறித்து சண்டிகரில் நவ்ஜோத் சித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமரீந்தர் சிங்கின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த சித்து, இது இன்றைய பிரச்சனை அல்ல என்றார். இதுகுறித்து மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பதில் அளிப்பேன் என்றும் அவர் கூறினார். அமரீந்தர் சிங்கின் இந்த குற்றச்சாட்டுக்கு பிறகு பாஜகவினர் சித்துவை குறிவைத்து விமர்சித்து வருகின்றனர். பாஜக பொதுச்செயலாளர் தருண் சுக் கூறுகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனும், அவருடன் இணைந்து ஆட்சி நடத்தும் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துடன் சித்துவின் தொடர்புகள் இப்போது அம்பலமாகி உள்ளன. சித்து அமைச்சராகவும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த காலம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

பஞ்சாபில் கலவரத்தை ஏற்படுத்தியதில் சித்துவின் பங்கு என்ன என்பது குறித்து மத்திய அமைப்புகள் விசாரிக்க வேண்டும், ஏன் இது தொடர்பாக ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, ஏன் சித்துவை அவர்கள் ஊக்குவித்து பாதுகாக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சித்துவுக்கும் கேப்ட் அமரீந்தர் சிங்குக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. சித்துவை பாகிஸ்தான் ஆதரவாளர் என்றும், நிலையற்றவை என்றும் கேப்டன் விமர்சித்து வருகிறார். இதுகுறித்து பதிலளிக்கும் சிந்து தனக்கான காங்கிரசின் கதவை மூடியவர்தான் அமரீந்தர் சிங், ஆனால் தற்போது அவர் காங்கிரசில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார் என்றும் விமர்சித்து வருகிறார். அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக அவரது மனைவி கூட இல்லை என சித்து கூறியுள்ளார். தற்போது இருவருக்குமான சண்டை மீண்டும் வலுக்கு ஆரம்பித்துள்ளது. 
 

click me!