தி.மு.க, 2 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது ஜாக்கிரதை... ஹெச்.ராஜா எச்சரிக்கை..!

Published : Jan 25, 2022, 10:38 AM ISTUpdated : Jan 25, 2022, 01:22 PM IST
தி.மு.க, 2 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது ஜாக்கிரதை... ஹெச்.ராஜா எச்சரிக்கை..!

சுருக்கம்

தி.மு.க., 2 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் தமிழகத்தில் ஆட்சி அமைத்ததுள்ளது. ஆகையால் மமதை வேண்டாம் 

தி.மு.க., 2 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் தமிழகத்தில் ஆட்சி அமைத்ததுள்ளது. ஆகையால் மமதை வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை கமலாலயத்தில் பேசிய அவர், ’’தமிழகத்தில் நடந்திருக்கும் மூன்று, நான்கு பிரச்னைகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அரியலுார் மாவட்டத்தில் லாவண்யா என்கிற பள்ளி மாணவியையும், அவரின் பெற்றோரையும் பள்ளி நிர்வாகத்தினர் மதம் மாற சொல்லி நிர்பந்தம் செய்து உள்ளனர். ஏற்க மறுத்த சிறுமியை இழிவுபடுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

'சஸ்பெண்ட்''குழு அமைத்து ஒரு வாரத்தில் சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவோம்' என எஸ்.பி., கூறியுள்ளார். அதோடு நிறுத்தாமல் 'சிறுமி மரணத்தில் மதமாற்ற பிரச்னை இல்லை' என்றும் கூறி, இந்த முடிவைத் தான் விசாரணை குழு எடுக்க வேண்டும் என்பது போல பேசியுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.


தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்டர்சன் பள்ளியில் திருநீறு, ருத்ராட்சம் அணிந்திருப்பது, ரவுடி போல இருப்பாத கூறி, இரு சகோதாரர்களை ஆசிரியர் அவமானப்படுத்தி உள்ளார். மமதை வேண்டாம். அந்த ஆசிரியர் மீது, அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், அரியலுார் சிறுமியை இழந்திருக்க மாட்டோம். 2 ஆண்டுகளுக்கு முன்பே அரியலூர் மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சி நடந்துள்ளது. அனிதாவுக்கு கூச்சலிட்டவர்கள் தற்போது எங்கே போனீர்கள்?

கிறிஸ்துவ பள்ளிகள் மத மாற்றும் கேந்திரங்களாக மாறிவிட்டதால், உடனடியாக மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, மாபெரும் மக்கள் தொடர்பு இயக்கத்தை ஹிந்து அமைப்புகள் மேற்கொள்ளும். அதற்கு பா.ஜ., உறுதுணையாக இருக்கும். திமுக ஆட்சியில் இந்துக்கள் மிரட்டப்படுகின்றனர். மதுரையில் 150 ஆண்டுகள் பழமையானமுனீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. பட்டா இடத்தில் இருக்கும் கோயில்களும் இடிக்கப்படுகின்றன. திமுக ஆட்சி அமைந்தவுடன் பல இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன.

தி.மு.க., ஆட்சி வந்ததில் இருந்து பல ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன. தி.மு.க., 2 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் ஆட்சி அமைத்தது; மமதை வேண்டாம்’’ என அவர் எச்சரித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு