பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் மதியழகன் வீரமரணம்.!! தமிழக முதல்வர் இரங்கல்.!!

By T BalamurukanFirst Published Jun 5, 2020, 9:43 PM IST
Highlights

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டதில் மதியழகன் வீரமரணம் அடைந்தார்.சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் மதியழகன் படுகாயம் அடைந்தார். ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

 மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் தியாக உணர்வோடு செயல்பட்டு வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், மதியழகன் குடும்பத்தினரை ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.

click me!