பயங்கரவாதிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலையாகவே மாறிவிட்டது பாகிஸ்தான். ஐநா கூட்டதில் இந்தியா பதிலடி.

By Ezhilarasan BabuFirst Published Mar 4, 2021, 11:38 AM IST
Highlights

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்  என ஐநா சபை கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா இவ்வாறு கூறியுள்ளது

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்  என ஐநா சபை கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா இவ்வாறு கூறியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இருநாடுகளும் பரம எதிரிகளாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து எல்லையில் சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது. இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து இந்தியா மீதான பாகிஸ்தானின் பகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.  இது குறித்து ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் பவன்குமார் பதே, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசியதாவது: தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்பும் வகையில் இந்தியா மீது புழுதியை வாரி இறைக்கிறது. பாகிஸ்தான் கவுன்சிலிங் நேரத்தை வீணடிக்க கூடாது. 

பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சிறுபான்மையினரின் மனித உரிமைகளை நசுக்குவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. மொத்தத்தில் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகவே பாகிஸ்தான் மாறி இருக்கிறது. இது அந்நாட்டு தலைவர்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின்னர்  பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்தவர், சீக்கியர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக குறைந்துள்ளது. அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மாயமாகின்றனர். அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதுபோன்ற அராஜகத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இவ்வாறு ஐநா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானை இந்தியா சரமாரியாக தாக்கியது. 
 

click me!