அமைச்சர் ராஜ கண்ணப்பனை அசிங்கப்படுத்திய பா.ரஞ்சித்.. அயோக்கியத்தனம் என டுவிட்.

By Ezhilarasan BabuFirst Published Mar 30, 2022, 12:43 PM IST
Highlights

ஆனால் முதல்முறையாக திமுக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மு.க ஸ்டாலின் பல விஷயங்களில் ஜெயலிதா பாணியை பின்பற்றி வருகிறார் என்ற கருத்து இருந்து வருகிறது. அந்தவகையில் அவரைப்போலவே தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

சாதிவெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை என்றும் சாதியை எதிர்ப்பவர்கள் சமூகநீதி அமைக்க முயற்சிக்கிறார்கள், அறியாதவர்கள் ராஜகண்ணப்பனை போல் ஆகிறார்கள் என திரைப்பட இயக்குனர் ரஞ்சித்குமார் செய்துள்ளார்.

திமுகவின் சர்ச்சைக்குரிய அமைச்சர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்றவுடன் தீபாவளிக்கு இனிப்பு வாங்குவதில் கமிஷன் பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது. அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து சோபாவில் அமர்ந்து பேசினார். சாதி கண்ணோட்டத்துடன் அவர் அப்படி நடந்து கொண்டார் என சர்ச்சை எழுந்தது. ஆனால் அது திருமாவளவன் அதை மறுத்திருந்தார்.

இதையும் படியுங்கள் :கல்யாணம் ஆகி 5 மாசம் தான் ஆகுது.. விஷம் குடித்த புதுமணப்பெண்.. வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்

இந்நிலையில்தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ராஜேந்திரன் என்பவரை சாதிரீதியாக திட்டினார் என புகார் எழுந்தது. இது குறித்து செய்தியாளரிடம் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அமைச்சர் அழைத்ததின் பெயரில் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன், அப்போது அவரது வீட்டுக்குள் நுழைந்தவுடன் அமைச்சர் நீ SC BDOதானே, உன்னை உடனே இடமாற்றி காட்டட்டுமா? என்று சாதி ரீதியாக பலமுறை சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டினார். எனக்கு 52 வயது ஆகிறது இந்த வயதில் என்னை இப்படி யாரும் திட்டியதில்லை, அமைச்சர் ஏன் அப்படி பேசினார் என்றும் எனக்கு புரியவில்லை. அவர் அப்படி திட்டியதால் அன்று இரவு முழுக்க நான் உறங்கவில்லை என்று அவர் கூறினார். 

இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து பலரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பனின். பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜகண்ணப்பனை போக்குவரத்துத் துறையில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு அமைச்சராக மாற்றியுள்ளார்.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ் சிவசங்கருக்கு போக்குவரத்து துறையை வழங்கியுள்ளார்.  இதற்கான உத்தரவு ஆளுநர் மாளிகை வாயிலாக நேற்று வெளியானது.

இதையும் படியுங்கள் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அமைச்சர்களின் இலாகாவை மாற்றுவது,  அமைச்சர் பதவியையே பறிப்பது என செயல்பட்டு வந்தார். ஆனால் திமுகவில் அதுபோன்ற எந்த மாற்றங்களும் நடந்ததில்லை. ஆனால் முதல்முறையாக திமுக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மு.க ஸ்டாலின் பல விஷயங்களில் ஜெயலிதா பாணியை பின்பற்றி வருகிறார் என்ற கருத்து இருந்து வருகிறது. அந்தவகையில் அவரைப்போலவே தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

 

சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்(அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்!

— pa.ranjith (@beemji)

இந்நிலையில்தான் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அமைச்சர் ராஜகண்ணப்பனை விமர்சித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.  அதில், சாதிவெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை, தமிழர்களுக்கு, தெலுங்கர்களுக்கு அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்தால் மூலதனம் (அயோக்கியத்தனம்) சாதியை அறிந்தவர் எதிர்ப்பதன் மூலமாக சமூகநீதி அமைக்க முயற்சிக்கிறார். அறியாதவன் திரு. ராஜகண்ணப்பன் ஆகிறார் என பதிவிட்டுள்ளார். 

 

click me!