"ஒட்டு மொத்த மனித உரிமைகளையும் மீறிவிட்டது பாஜக" - ப.சிதம்பரம் கடும் ஆவேசம்

 
Published : Feb 16, 2017, 05:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"ஒட்டு மொத்த மனித உரிமைகளையும் மீறிவிட்டது பாஜக" - ப.சிதம்பரம் கடும் ஆவேசம்

சுருக்கம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஒட்டுமொத்த மனித உரிமைகளையும் மீறிவிட்டது, நிகழ்வுகளை மாற்றாமல் பாதுகாக்க வேண்டிய வரலாற்றை, புராணத்துடன் கலக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

மனித உரிமை மீறல்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தனிநபர்களின் ஒட்டுமொத்த மனித உரிமைகளையும் மீறிவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் சிலர், மக்களிடம் எதை உடுத்த வேண்டும், யாரை விரும்ப வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என உத்தரவு போடுகிறார்கள். இவர்களை கண்டிப்பது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசி அறிக்கை வெளியிடவில்லை.

சர்ச்சை

உத்தரப்பிரதேசத்தில் நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் கூட,  பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பிரசாரகாரர்கள், சில சர்ச்சைக்குரிய, பிரச்சினைகளை உருவாக்கும் வார்த்தைகளை வெளியிடுகிறார்கள். உண்மையான ஜனநாயகத்துக்கும், வளரும் சமுதாயத்துக்கும் இதுபோன்ற விசயங்கள் சரியல்ல.

இந்த போன்ற ஆளும் கட்சியினரின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

தேசவிரோதிகளா?

மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளை யாரேனும் விமர்சனம் செய்தால் அவர்கள் தேச விரோதிகள். ஏன் ரோகித் வெமுலாதற்கொலை செய்ய வேண்டும், தாத்ரியில் அகிலாக்கை ஒரு கும்பல் ஏன் அடித்துக்கொல்ல வேண்டும், கண்ணையா குமார் ஏன் சிறையில் தள்ளப்பட வேண்டும். மனிதராகப் பிறந்தவர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். ஆனால், கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளான நாங்கள், கேள்வி கேட்பது எங்கள் கடமை. இவ்வாறு ஆளும் கட்சி செய்வது கவலை அளிக்கிறது.

வரலாற்றை திரிக்கிறது

பாரதிய ஜனதா கட்சி வரலாற்றையும் திரிக்கிறது. வரலாறு என்பது என்ன நடந்தது என்பதற்கான மிகச்சரியான ஆவணம். புராணத்தில் இருந்து வரலாற்றை விலக்கி வைத்து பார்க்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, பாரதிய ஜனதா கட்சி வரலாற்றையும், புராணத்தையும் கலக்கிறது. வரலாற்றை சிலர் எழுதும்போது, ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றார்போல் திரித்து எழுத முடியும். ஆனால், வரலாற்று நிகழ்வுகளை யாரும் திரித்து எழுதக்கூடாது.

மதிப்பீடு என்ன?

கடந்த 3ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சியை மதிப்பிட்டால், பிரித்தாளும் திட்டத்தை அந்த கட்சியை தடுத்து நிறுத்தவில்லை,  மதம், சாதி ஆகியவற்றின் பெயரிலா, இந்துத்துவத்தை திணிக்கும் முயற்சிக்கிறது.  கடந்த 2016ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்தங்கிவிட்டது. மூன்றாவதாக, ரூபாய் நோட்டு தடையால் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

 மதிப்பில்லை

நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் ஏதும் விவாதம் செய்ய முடியவில்லை, அவ்வாறு எதிர்க்கட்சிகள் ஏதேனும் பிரச்சினைகளை எழுப்பினாலும், அதை குரல் கொடுத்து அரசு கேட்பதில்லை, அதை சரிசெய்ய முயற்சி எடுப்பதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!
ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!