"தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய மிகப்பெரிய தடை பாஜக தான்" - காங்கிரஸ் கடும் தாக்கு

 
Published : Feb 16, 2017, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய மிகப்பெரிய தடை பாஜக தான்" - காங்கிரஸ் கடும் தாக்கு

சுருக்கம்

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க விடாமல் மிகப்பெரிய தடையாக இருந்தது, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தான் என்று காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இடைய பெரிய இழுபறி இருந்து வந்தது. இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அதிமுக கட்சியின் மூத்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இரு நாட்களாக அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில்,  முதல் அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி  ஆட்சி அமைக்க ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, 31 கொண்ட அமைச்சர்களுடன், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார்.  ஏறக்குறைய, இரு வாரங்களாக நீடித்து வந்த குழுப்பமாந சூழல் முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா புதுடெல்லியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தபோது கூறுகையில், “ தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க மிகப்பெரிய தடையாக இருந்தது பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான். தமிழக மக்கள் நிலையான ஆட்சி வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள், ஆனால், மோடி அரசு கடந்த ஒருவாரத்துக்கு மேலாக அதற்கு தடையாக இருந்து வந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு