முதல் கையெழுத்தே காவல்துறை அதிகாரிகள் மாற்றம் - உருளுது பெரிய தலைகள்..!!

 
Published : Feb 16, 2017, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
முதல் கையெழுத்தே காவல்துறை அதிகாரிகள் மாற்றம் - உருளுது பெரிய தலைகள்..!!

சுருக்கம்

எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தே காவல்துறை உயரதிகாரிகள் மாற்றம்தானம், பல பெரிய தலைகள் தூக்கியடிக்கபட உள்ளனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக அதிமுக ஆட்சிக்கு வரும்பொழுது அவர்களுக்கு ஆதரவான ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றபடுவது வழக்கம்.

ஆனால் தற்போது மிகவும் வித்த்தியாசமாக ஜெயலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவிற்கு உள்ளேயே யார் முதல்வர் என்பதில் பலத்த போட்டி நிலவிய சூழ்நிலையில், இரண்டு புறமும் நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல் துறை உயரதிகாரிகள் தடுமாறினர்.

உளவுத்துறைக்கு புதிய அதிகாரி கொண்டு வரப்பட்டார். மாநில சட்ட ஒழுங்கு உயரதிகாரிகளுக்கு இடையே எந்த அணியை ஆதரிப்பது என்பதில் இரு வேறு கருத்துகள் ஏற்பட்டது.

இதன் அடிப்படையில் கூவத்தூர் ரிசார்ட்டில் வைக்கபட்டிருந்த எம்.எல்.ஏக்களை மீட்பதில் ஒரு பிரிவு அதிகாரிகள் வேகமாகவும் ஒரு பிரிவு அதிகாரிகள் மென்மையாகவும் நடந்து கொண்டனர். இது அப்பட்டமாக வெளிப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த விவகாரத்தில் காவல்துறை உயரதிகார்கள் மீது தற்போது பதவிக்கு வந்துள்ள அமைச்சர்கள் கடுமையான கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்த உயரதிகாரி மீது எடப்பாடி தரப்பினர் கடும் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.

இதுதவிர உளவுத்துறை மற்ற முக்கியத்துறைகளில் தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை நியமிக்க முதல் கையெழுத்தாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக மாநிலத்தில் உச்ச பொறுப்பில் உள்ள உயரதிகாரி ஒருவருக்கு சிக்கல் ஆரமபமாகி உள்ளது. மேலும் இன்னொரு முக்கிய அதிகாரிக்கு நல்ல பதவி கிடைக்க உள்ளதாம்.

சென்னை காவல் ஆணையகரத்தில் அலுவலக உயரதிகாரிகள் சிலருக்கு மாற்றமும் சிலருக்கு ஏற்றமும் இருக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேச தேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!