படுக்கை கிடைக்காதவர்களுக்கு பேருந்தில் ஆக்சிஜன் படுக்கை.. அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

Published : May 19, 2021, 05:34 PM IST
படுக்கை கிடைக்காதவர்களுக்கு பேருந்தில் ஆக்சிஜன் படுக்கை.. அமைச்சர்  சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

சுருக்கம்

சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆக்சிஜன் வாகனத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். 

சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆக்சிஜன் வாகனத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். கொரோனா  நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகள்  மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பு பேருந்தில் 6 பேர், ஆக்சிஜன் பெறும் வசதி தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுளத்தை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். 

ஆய்வு மேற்கொண்டனர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு; தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது ஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில் 6 படுக்கை வசதிகள் கொண்ட பேருந்தில் ஆக்சிஜன் அமைக்கப்பட்டிருக்கிறது. 5 லிட்டர் கொண்ட 4 ஆக்சிஜனும், 10 லிட்டர்  கொண்ட இரண்டு ஆக்சிஜன்களும் முறையான வசதியில் இந்த பேருந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இதுபோன்ற பல முன்னேற்பாடுகளை முதல்வர் செய்து வருகிறார். தொடர்ச்சியாக தமிழக மக்களை கொரனாவில் இருந்து மீட்பதற்காக முதல்வர் செயல்பட்டு வருகிறார். 

அவர்களுக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், மேலும் இந்து அறநிலைத்துறை பொருத்தவரை இன்று புதிதாக 5 முக்கிய அம்சங்களை தமிழக அரசு வெளியிட்டு இருப்பதாகவும் அதில் முக்கியமாக ஆன்மீக அரசியல் என்று பல ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுகவின் சதித் திட்டங்களை வெளிக் கொண்டு வரும் பொருட்டு அறநிலை துறை நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை