கொரோனா உயிரை கொல்லுது.. ஆனா இவங்க கொஞ்சம் கூட அடங்கல.. 21 ஆயிரம் பேர் மீது வழக்கு.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2021, 5:19 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாளில் மட்டும் முகக்கவசம் அணியாதது மற்றும் தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 21004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாளில் மட்டும் முகக்கவசம் அணியாதது மற்றும் தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 21004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோரோனா பெருந்தோற்று இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நாவடிக்கைளை எடுத்து வருகிறது. குறிப்பாக வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் வழக்கு பதிவு மற்றும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவது 21,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 19,252 வழக்குகளும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 1,752 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாததற்காக தென்மண்டலத்தில் அதிகபட்சமாக 5,542 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தனிமனித இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக அதிகபட்சமாக நகர்ப்புறங்களில் 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 8 ஆம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக சுமார் 22 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!