திமுக, அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த தினகரன்... அமமுகவுடன் கைகோர்த்த ஓவைசி.. ஒப்பந்தம் கையெழுத்தானது..!

Published : Mar 08, 2021, 06:58 PM IST
திமுக, அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த தினகரன்... அமமுகவுடன் கைகோர்த்த ஓவைசி.. ஒப்பந்தம் கையெழுத்தானது..!

சுருக்கம்

யாரும் எதிர்பாராத விதமாக அமமுகவுடன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக அமமுகவுடன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

ஆனால், அமமுக யாருடன் கூட்டணி என்பது சொல்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தொடர்ந்து கூறி வந்தார். இதனிடையே, அமமுக கட்சியில் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கட்சியுடன் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்யுடன் கூட்டணி அமைக்க உள்ளது. அமமுக கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி போட்டியிட ஒப்பந்தம் செய்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!