கருத்துக்கணிப்பால் கதிகலங்கி போன ரங்கசாமி... எதிர்ப்பை மீறி என்.ஆர்.காங்கிரஸ் எடுத்த தடலாடி முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 8, 2021, 6:18 PM IST
Highlights

கருத்துக் கணிப்பின் படி,  என்.ஆர்.காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிடால் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடியும். அதேவேளை பாஜக - அதிமுக கூட்டணி 23 இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் எனத் தெரிய வந்தது. 

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்விட்டன. தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகிய பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து ராஜினாமா செய்த பிறகு அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

எதிர் வர உள்ள சட்டமன்ற தேர்தலை பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எப்படியாவது புதுவையில் ஆட்சி அமைக்க வேண்டும் என கணக்கு போடும் காங்கிரஸ் கட்சி, என்.ஆர்.காங்கிரஸை தங்களுடைய கூட்டணியில் இணைய வலியுறுத்தி வருகின்றனர். 

இன்று காலை வெளியான கருத்துக் கணிப்பின் படி,  என்.ஆர்.காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிடால் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடியும். அதேவேளை பாஜக - அதிமுக கூட்டணி 23 இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் எனத் தெரிய வந்தது. முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒரு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக மட்டும் தனியாக 9 தொகுதிகளில் வெல்லும்  என சர்வே முடிவுகள் கூறுகின்றன. 

இந்நிலையில் இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுமார் அரை மணி நேரம் நடந்த அந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே விருப்பம் என ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் சாமிநாதன், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இணைய உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், காங்கிரஸ் - திமுக கூட்டணியை வீழ்த்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜகவுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

click me!