எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்.. மீண்டும் சீனுக்கு வரும் TTV.!

Published : Jul 27, 2021, 07:00 PM IST
எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்.. மீண்டும் சீனுக்கு வரும் TTV.!

சுருக்கம்

திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அதை தற்போது மறந்து செயல்படுகிறார்கள் என்று டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

கொள்கைக்காக வந்தவர்கள் எங்களுடன் இலக்கை நோக்கி பயணிப்பார்கள், சுயநலத்திற்காக வந்தவர்கள் செல்கின்றனர் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அக்கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது தொடர்பாக எந்த கருத்தையும் கூறாமல் டிடிவி.தினகரன் அமைதி காத்து வந்தார். 

இந்நிலையில், திருச்சி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- அதிமுகவை மீட்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும். அதை நோக்கிதான் பயணம் செய்கிறோம். அதிமுக தொடங்கப்பட்டது முதல் ஒற்றைத்தலைமையில் தான் பயணித்தது. மீண்டும் அது சரியாகும். 

தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்தாது. கொள்கைக்காக வந்தவர்கள் எங்களுடன் இலக்கை நோக்கி பயணிப்பார்கள், சுயநலத்திற்காக வந்தவர்கள் செல்கின்றனர். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அதை தற்போது மறந்து செயல்படுகிறார்கள் என்று டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். மேலும், உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். நடவடிக்கை சட்டப்படி இருந்தால் சரிதான் என முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி