கற்பழிப்பவர்களுக்கு விளக்கு பிடிக்கும் கலாச்சாரம் நம் கலாச்சாரம்.. அங்க இடிச்சா தப்பில்லயா. குமுறும் சின்மயி.

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2021, 3:41 PM IST
Highlights

அதனால் இந்த கலாச்சாரத்துக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது, கலாச்சாரம் நன்றாக இருக்கும்.  இது பயங்கர முற்போக்கு கலாச்சாரம், இது பயங்கர கிரேட் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் என்றெல்லாம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கூறி நகைத்துள்ள அவர், கற்பழிப்பவர்கள், 

நமது இந்திய கலாச்சாரம்  கற்பழிப்பாளர்களுக்கு விளக்கு பிடிக்கிற கலாச்சாரம் என்றும், தயவுசெய்து  மாணவிகளுக்கு செக்ஸி எஜுகேஷன் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஒரு பாதிக்கப்பட்ட பெண் தனக்கு பாலியல் சீண்டல் தொந்தரவு நடந்திருக்கிறது என கூறினால் அந்த பெண்ணை எந்த அளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அவமானப்படுத்தும் சமுதாயமாக இது இருக்கிறது என அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கேவை தனியார் பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் உயிரிழந்துள்ள நிலையில் இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் விவகாரத்தில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் நடந்து வந்த பாலியல் வக்கிரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததுடன், அதில்  ஈடுபட்ட பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி, திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவியுடன் தவறாக பழகி அவரை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தியதன் விளைவாக அந்த மாணவியின் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். 

முன்கூட்டியே அந்த மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என கூறிதன்  காரணமாக அந்த மாணவியை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கப்பட்டார், ஆனால் ஆசிரியர் தனக்கு செய்ததை சீண்டல்களை எண்ணி எண்ணி அந்த மாணவி  மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதை அந்த மாணவி பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அந்த ஆசிரியரின் மனைவி ஆகியோரிடன் கூறியும், அவர்கள் இதை வெளியில் சொன்னால் உனக்குதான் அசிங்கம் இதை அப்படியே விட்டு விடு என கூறியதும் பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் புகாரை அலட்சியப்படுத்தி குற்றத்திற்கு துணைபோன பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியரின் பாலியல் இச்சையால் மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து  பலரும் சமூகவலைதளத்தில் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பின்னணி பாடகியும், சமீபகாலமாக பெண்ணியம் குறித்து தொடர்ந்து சமூகவலைதளத்தில் பேசியும் எழுதியும் வரும் சின்மயி அந்த மாணவியின் உயிரிழப்புக்கு இந்த சமூகம் தான் காரணம் எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதன் விவரம் பின்வருமாறு:-  குறிப்பாக இதுபோல பாதிக்கப்படும் மாணவிகள் அதை பெற்றோர்களிடம் கூறும் போது, அவர்கள் இதை வெளியில் சொல்வதை தவிர்க்கின்றனர். அப்படி வெளியில் கூறினால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று அவர்களிடம் உள்ள மனநிலையே அதற்கு காரணம்.  அப்போதே இந்த மாணவியின் மனநிலையை உணர்ந்து பெற்றோர்கள் குரல் கொடுத்திருந்தால் அந்த பெண்ணை காப்பாற்றியிருக்க முடியும். இதற்கு இந்த சமுதாயமும் காரணம், அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை தலைமை ஆசிரியையிடம் கூறியும், அதற்கு அந்த தலைமை ஆசிரியை, பேருந்தில் யாரோ இடித்தது போல எடுத்துக் கொள்ளுங்கள் என அந்த மாணவிக்கு அறிவுரை கூறியுள்ளார். நான் கேட்கிறேன் பேருந்தில் பெண்களை இடித்தால் அது தவறு இல்லையா.? இதெல்லாம் ஒரு சாதாரணமான விஷயம் என்பது போலத்தான் இந்த சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதேபோல அந்த ஆசிரியரின் மனைவியிடம் அந்த மாணவி கூறியும், அவர் இதை வெளியில் சொன்னால் உனக்குதான் அசிங்கம் என அட்வைஸ் செய்திருக்கிறார். இதனால்தான் அந்த மாணவி இறந்துபோனார். அதேபோல பாதிக்கப்பட்ட ஒரு பெண் வெளியில் வந்து தனக்கு  பாலியல் சீண்டல் நடைபெற்றிருக்கிறது எனக் கூறினால், அதை கேலியும் கிண்டலும் செய்து அந்த பெண்ணை காயப்படுத்தும் சமுதாயமாகவே இந்த சமுதாயம் இருக்கிறது.

தயவுசெய்து குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுங்கள், அது மிகவும் அவசியம், இதையெல்லாம் தெரிந்து கொள்வது நமது கலாச்சாரத்திற்கு அவமானம் என்றெல்லாம் கூறாதீர்கள், நான் சொல்லுகிறேன் இந்த சமுதாயம் பாதிக்கப்பட்ட பெண்களை காயப்படுத்தும் சமுதாயம், பாலியல்  கல்வி படிப்பதால் நமது கலாச்சாரம் ஒன்றும் சீரழித்து விடாது, ஒரு பெண்ணை யாராவது பாலியல் சீண்டல் செய்து விட்டாலும், ஒரு பெண்ணை யாரும் கற்பழித்து விட்டாலும் அதை வெளியில் சொன்னால் அது அவர்களுக்கு தான் அசிங்கம் என்ற தவறான எண்ணத்தை ஊட்டுகிற சமுதாயமாக இருக்கிறது இந்த சமுதாயம். எனவே பாலியல் கல்வி என்பது அவசியம், அதனால் இந்த கலாச்சாரத்துக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது, கலாச்சாரம் நன்றாக இருக்கும்.  இது பயங்கர முற்போக்கு கலாச்சாரம், இது பயங்கர கிரேட் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் என்றெல்லாம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கூறி நகைத்துள்ள அவர், கற்பழிப்பவர்கள், பாலியல் செயலில் ஈடுபடுபவர்கள், பெண்களை சுரண்டுபவர்களுக்கு விளக்கு பிடிக்கும் கலாச்சாரம்தான் இந்த இந்திய கலாச்சாரம் என்றுதான் நான் சொல்லுவேன், இதை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லுவேன், மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன் என அவர் பேசியுள்ளார். 
 

click me!