முதல்வர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து..?? காவல் துறை பத்திரமா பார்த்துக்கங்க.. பகீர் கிளப்பிய சுப.வீ.

Published : Jun 10, 2022, 02:48 PM ISTUpdated : Jun 10, 2022, 02:50 PM IST
முதல்வர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து..??  காவல் துறை பத்திரமா பார்த்துக்கங்க.. பகீர் கிளப்பிய சுப.வீ.

சுருக்கம்

சுப்ரமணியசாமி போன்றவர்களால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது அவரை காவல்துறையினர் மிக பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டம் வந்துவிட்டதோ என அஞ்ச தோன்றுகிறது என திராவிட இயக்கத் தமிழர் பேரவை  தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.  

சுப்ரமணியசாமி போன்றவர்களால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது அவரை காவல்துறையினர் மிக பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டம் வந்துவிட்டதோ என அஞ்ச தோன்றுகிறது என திராவிட இயக்கத் தமிழர் பேரவை  தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். திமுகவை நேர்மையாக எதிர்க்க முடியாது என்பதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகின்றன. எப்போதுமே திமுகவை மிகக்  காட்டமாக  விமர்சிக்கக் கூடிய பாஜக தலைவர்களில் மிக முக்கியமானவர்  சுப்பிரமணியன் சாமி ஆவார். இந்நிலையில் அவர் திமுகவுக்கு எதிராக இந்திய துணைத் தேர்தல் ஆணையர் மிசாவ்விற்கு  புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், திமுக செயலாளர் தேர்தல் விதிகளை மீறி விட்டார், பிராமணர்களை அழித்தொழிக்க வேண்டும், பிராமணர்களை இனவழிப்பு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திராவிட இயக்கம் தொடங்கிய பெரியாரின் கொள்கையுத் அதுதான், எனவே தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் பிராமணர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த முடியாத  சூழல் ஏற்படலாம், இதைப் பயன்படுத்தி திமுக பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தேர்தல் விதிகளுக்கு எதிரானது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும், இதுதொடர்பாக சட்டரீதியாக ஆவணங்களை அளிக்கவும் கோப்புகளை தரவும் நான் தயாராக உள்ளேன்   தேர்தல் ஆணையத்திலிருந்தும் திமுகவின் பதிவை நீக்க வேண்டும், உதயசூரியன் சின்னத்தை முடக்க வேண்டும், இது மிகவும் அவசரமான  பிரச்சனை என அவர் தேர்தல் ஆணையத்தில் கூறியுள்ளார். சுப்ரமணிய சாமியின் இந்த குற்றச்சாட்டை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எத்தனை சுப்ரமணியசாமி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது என கூறி வருகின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி செந்தில் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், முடிந்தால் திமுகவை தொட்டுப் பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள  திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்ரமணிய சாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ள விவரம் பின்வருமாறு:-

சுப்பிரமணியசாமிக்கு அரசியல்ரீதியாக பதில் சொல்வதைக் காட்டிலும் அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டும், எனக்கு தெரிந்த மனநல மருத்துவரான டாக்டர் ஷாலினியிடமே அவருக்கு சிகிச்சை வழங்கலாம். அவர் போகிறபோக்கில் பெரியாரை குற்றம்சாட்டியுள்ளார் பெரியார் ஒரு நாளும் வன்முறை போக்கை கையில் எடுத்தவர் இல்லை, ஆதிக்க போக்கை கைவிட்டு விட்டால் பிராமணர்களும் எங்கள் சகோதரர்கள் தான் என அவர் கூறினார். எவராக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நம்மை ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தால் நாம் தற்காப்பிற்காக தயாராக இருக்க வேண்டும்  என்ற அர்த்தத்தில் தான் ஏதோ ஒரு சூழலில் பேசியபோது ஒவ்வொருவரும் பெட்ரோல் கேனை கையில் வைத்துக் கொள்ளுங்கள் என பேசினார். அது தற்காப்பிற்காக பேசியது வன்முறைக்காக அல்ல, எந்த இடத்திலும் இன அழிப்பு வன்முறை என்று அவர் பேசியதே இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் உதயசூரியன் சின்னத்தை முடக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு அடிப்படை அறிவு அற்றவர்கள் பேசுகிற பேச்சு என்று நான் பார்க்கிறேன். ஒன்னே முக்கால் கோடி வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற ஒரு இயக்கத்தை அவர் சாமானியமாக தேர்தல் ஆணையம் பதிவு நீக்க வேண்டும் முடக்க வேண்டும் என கூறுகிறார். தேர்தல் ஆணையம் என்ன செய்ய வேண்டுமென்றால் சுப்பிரமணியசாமியை ஒரு நல்ல மனநல  மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு வகையில் இவர்களின் பேச்சை நாம் சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த பேச்சின் பின்னணியில் ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்ற ஆபத்தை மறைமுகமாக உணர்த்துகிறார், ஏனென்றால் நேர்மையாக மக்களை சந்தித்து இவர்களால் வெற்றி பெற முடியாது. இன்றைக்கு தமிழக முதல்வருக்கு இருக்கிற செல்வாக்கை பார்த்து அச்சப்பட்டு இனிமேல் இவர்களை நேர்மையான வழியில் சந்திக்க முடியாது என முடிவு செய்துள்ள இவர்கள், வேறு ஏதோ திட்டத்தை செய்கிறார்கள்.

எனக்கு அச்சமாகவே இருக்கிறது, இவர்கள் எந்த பழி பாவங்களுக்கும் அஞ்சாதவர்கள், நான் விரிவாக எல்லாம் சொல்லவில்லை சுருக்கமாகவே சொல்கிறேன். காவல்துறை நமது முதலமைச்சரை கவனமாக பாதுகாக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது, இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்னும் சுப்பிரமணியசாமி மீதான சந்தேகம் துடைக்கப்படவில்லை, பல ஆபத்துக்களுக்கு வித்திடுபவராக சுப்ரமணியசாமி இருக்கிறார். அவரை கைது செய்ய வேண்டும், அவர் பாரதிய ஜனதா கட்சியை பற்றியே மிக மோசமாக பேசுகிறவர்.  இவ்வாறு சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?