பாமகவில் முக்கிய நிர்வாகி நீக்கம்.. சாட்டையை சுழற்ற தொடங்கிய அன்புமணி..!

Published : Jun 10, 2022, 02:00 PM IST
பாமகவில் முக்கிய நிர்வாகி நீக்கம்.. சாட்டையை சுழற்ற தொடங்கிய அன்புமணி..!

சுருக்கம்

பாமக தலைவராக அன்புமணி பதவியேற்றதில் இருந்து அக்கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கட்சியில் சரியாக செயல்படாத இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்பட்ட முன்னாள் ஒன்றிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்து:- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உடையாளூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய நிர்வாகி ஜெயந்தன் என்கிற ஜேம்ஸ் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால்,

இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் ராமதாசின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். அவருடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாமக தலைவராக அன்புமணி பதவியேற்றதில் இருந்து அக்கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கட்சியில் சரியாக செயல்படாத இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!