காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும். அறிவிப்பு பலகை வைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published May 24, 2021, 2:26 PM IST
Highlights

அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள  890 தனியார் மருத்துவ மனைகளிலும்  காப்பீடு திட்டத்தின் கீழ்  சிகிச்சை அளிக்கப்படுகிறது என பெயர் பலகை வைக்கப்பட இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள  890 தனியார் மருத்துவ மனைகளிலும்  காப்பீடு திட்டத்தின் கீழ்  சிகிச்சை அளிக்கப்படுகிறது என பெயர் பலகை வைக்கப்பட இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 104 ஆக்சிஜன் செறிவூட்டி படுக்கைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கிங்ஸ் மருத்துவமனையில் ஏற்கனவே 300ஆக்சிஜன் கூடிய படுக்கைகள்,350 சாதாரண படுக்கைகள் இக்கும் நிலையில் தற்போது 104 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தீவிர பணிகள் நடைபெற்று வருகிறது என்ற அவர், சென்னையை பொறுத்தவரை கொரோனா தடுப்பு மையங்களில்  6000 படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும்  தற்போது பெரியார் திடலில் சித்த மருத்துவ மையம் உருவாகி வருகிறது என அவர் தெரிவித்தார். 

சென்னையை பொறுத்தவரை 21 இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாக மருத்துவமனைக்கு செல்லாமல் பரிசோதனை மையங்கள் சென்று எந்த மருத்துவமனை செல்வது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனவும் 
தமிழகத்தில் காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ள 890 மருத்துவ மனைகளிலும்   காபீட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என பெயர் பலகை வைக்கப்பட இருக்கிறது. அதற்காக உத்தரவும் போடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதிகம் வசூலித்தால், அவை தெரிய வரும்போது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் தடுப்பூசி போடும் எண்ணிக்கை குறையவில்லை. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்து விட்டது. குறிப்பாக  வெளியில் செல்லும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த ஒரு வாரத்தில் 11 லட்சம் தடுப்பூசி போடப்படும் என அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய மக்கள்நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு இதற்காக தொழில்துறையுடன் இணைந்து பணிகள் நடக்கிறது. அதை அதிகாரிகள் கண்காணிப்பு செய்கிறோம் என அவர் தெரிவித்தார். 

 

click me!