கோயில்களில் தயார் செய்யப்படும் உணவுப்பொட்டலங்களை மருத்துவமனைகளில் விநியோகிக்க உத்தரவு. இந்து அறநிலையத் துறை.

By Ezhilarasan BabuFirst Published May 24, 2021, 5:23 PM IST
Highlights

அன்னதானம் தயார் செய்யும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உணவுப்பொட்டலங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் இத்துறைப்பணியாளர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினியுடன் PPT KIT வழங்கப்பட்டு அதனை உபயோகிப்பதை அனைத்து இணை ஆணையர்களும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திருக்கோயில்களில் தயார் நிலையில் உள்ள உணவுப்பொட்டலங்களை திருக்கோயில்களிலிருந்து பெற்று மருத்துவமனைகளில் விநியோகம் செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சியரை நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெற்று அதன்படி செயல்படுமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அன்னதான திட்டம் நடைபெறும் திருக்கோயில்களிலிருந்து நாள்தோறும் உணவுப்பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, திருக்கோயில்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் தேவைப்படும் நபர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

அன்னதானம் தயார் செய்யும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உணவுப்பொட்டலங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் இத்துறைப்பணியாளர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினியுடன் PPT KIT வழங்கப்பட்டு அதனை உபயோகிப்பதை அனைத்து இணை ஆணையர்களும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், திருக்கோயில்களில் தயார் நிலையில் உள்ள உணவுப்பொட்டலங்களை திருக்கோயில்களிலிருந்து பெற்று மருத்துவமனைகளில் விநியோகம் செய்ய, இணை ஆணையர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரை நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப்பெற்று அதன்படி செயல்படுமாறும் தெரிவித்துள்ளார். 

click me!