EPS Vs OPS : அதிமுக பொதுக்குழுவுக்கு போகாதீங்க..உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்.!

By Raghupati RFirst Published Jun 22, 2022, 12:57 PM IST
Highlights

EPS Vs OPS : அதிமுக பொதுக் குழுவுக்கு செல்ல வேண்டாம் என பொதுக் குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது.  அதிமுகவுக்குள் ஒற்றை  தலைமை என்ற கோரிக்கை வலுத்துள்ளது . இதனால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கான  ஆதரவு கட்சியில் குறைந்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரிடம் தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு, செயற்குழு கூடுவதாக தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே முடிஞ்சுபோச்சு.! அதிமுகவை கைப்பற்றும் இபிஎஸ்..தர்ம சங்கடத்தில் ஓபிஎஸ்

இதனால் ஓபிஎஸ் விரைவில் ஓரங்கட்டப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இதை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . இந்த சூழலில்  பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். அத்துடன் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கிய நிர்வாகிகளும் தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ளனர்.

 

மேலும், ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓபிஎஸ்ஸிடம் அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு செல்ல வேண்டாம் என பொதுக் குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!

click me!