ஓபிஎஸ் ரொம்ப பிஸிங்க.. எடப்பாடிதான் எங்க தலைவர்.. பன்னீரை பயங்கரமா பங்கம் செய்த நடிகை விந்தியா..

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2022, 12:53 PM IST
Highlights

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கை, அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கை, அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். அதிமுகவை தலைமை ஏற்று நடத்த எடப்பாடி பழனிச்சாமி தான் சரியான நிர்வாகி என்றும் அவர் கூறியுள்ளார்.

 ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தும் அவரை சந்திக்க முடியவில்லை, அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார் என்றும் அவர் நக்கலாக கூறியுள்ளார். மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நாளை அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தை நடத்த அனுமதிக்க்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் காவல் துறைக்கு கோரிக்கை வைத்தோம் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த எப்படி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக அதிமுகவின் ஒற்றைத்  தலைமையாக நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட  உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.இந்நிலையில் பன்னீர் செல்வத்திடம் இருந்த ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சாய்ந்துவிட்டனர். 

இதனால் பன்னீர்செல்வம்  நிராகதி ஆகியுள்ளார். முதல்வர் வேட்பாளர் வாய்ப்பை இழந்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை இழந்து, இப்போது மொத்த கட்சியையும் எடப்பாடி பழனிச்சாமி இடம் தாரை வார்க்கும் நிலை வந்துவிட்டதே என்ற வேதனையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வந்த அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா, எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்; போக்கிரி தனத்தை காட்டிய போலி சாமியார்.. படிக்க வைப்பதாக கூறி மாணவியை நாசம் செய்த கொடூரம்..!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் அவர், அரசியலைப் பொருத்தவரை எதிர்காலத்தை வைத்துத்தான் நிர்வாகிகளும் தொண்டர்களும் முடிவெடுப்பார்கள். கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது. இப்போது அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்படும் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். திமுகவை வலுவாக்க தைரியமாக எதிர்க்கும் தலைவராக இபிஎஸ் உள்ளார்.

பன்னீர்செல்வத்தின் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது, அவரும் எங்கள் கட்சியின் மூத்தவர் தான், நாங்கள் இப்போது கூட அவரை பிரித்து பார்க்கவில்லை, எப்படி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை ஏற்ற விரைவில் ஆட்சியை அதிமுக கைப்பற்றும் எனக் கூறினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரை சந்தித்து சமாதானம் பேச நான் பலமுறை முயற்சித்தேன்.

இதையும் படியுங்கள்: பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு.! பழங்குடியின பெண்மணியை ஆதரிப்பதில் பெருமை-பாமக

ஆனால் அவரது உதவியாளர்கள் அண்ணனிடம் தகவல் சொல்வதாக கூறினர், ஆனால் கூப்பிடவில்லை, ஓபிஎஸ் மிகவும் பிசியாக இருக்கிறார் போல தெரிகிறது என நக்கலாக கூறினார். அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி தான் சரியான நபர் நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள்  என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!