எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்க தயாராகிவிட்ட ஒ.பி.எஸ் அணி – உறுதி செய்த ஆறுக்குட்டி...!!!

 
Published : Jun 08, 2017, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்க தயாராகிவிட்ட ஒ.பி.எஸ் அணி – உறுதி செய்த ஆறுக்குட்டி...!!!

சுருக்கம்

Ops team is ready to support edappadi - confirmed by arukutty

 

தமிழக அரசின் ஆட்சி எப்போதும் கவிழாது எனவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பே இல்லை எனவும் ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் உச்சகட்ட குழப்பங்களும் மாறுதல்களும் வந்துகொண்டே இருக்கிறது.

எஃகு கோட்டையாய் திகழ்ந்த அதிமுகவின் உறுதி தன்மை தற்போது பல்வேறு குழப்பங்கள் நிகழ்வதால் பேஸ் மட்டமே ஆடிப்போய் நிற்கிறது.

ஜெ மறைவிற்கு பிறகு ஒ.பி.எஸ் முதலமைச்சராகவும் சசிகலா பொதுச்செயலாளரராகவும், பொறுப்பேற்றனர். ஆனால் ஒ.பி.எஸ் பதவியை சசிகலா பிடிக்க முயன்றார்.

இதனால் வலுக்கட்டாயமாக பன்னீர்செல்வத்தை பதவி விலக வைத்ததால் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார் ஒ.பி.எஸ். எனவே கட்சி இரண்டாக உடைந்தது.

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா ஆட்சிக்கு எடப்பாடியையும் கட்சிக்கு தினகரனையும் கைகாட்டிவிட்டு சென்றார். ஆனால் எடப்பாடி ஆட்சியை பிடுங்க தினகரன் திட்டம் தீட்டினார்.

இதை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி ஆத்திரமடைந்து தினகரனை விலக்கி விட்டு ஒ.பி.எஸ்சை வளைத்து போட அமைச்சரவையை தூது விட்டார்.

இதனால் அமைச்சரவை ஒ.பி.எஸ் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் வெளிப்படையாக பேட்டி அளித்தனர்.

ஆனால் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தால் மட்டுமே கட்சி இணையும் என ஒ.பி.எஸ் அணி திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

கட்சி இணையும் என்று அனைவராலும் எதிர்பார்க்க பட்ட சமயத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்ததால் அதிமுகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.

இதைதொடர்ந்து இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்ற தினகரனுக்கு தற்போது 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிட்டியதால் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கதிகலங்கி உள்ளது.

கலக்கத்தில் உள்ள உள்ள எடப்பாடி அணிக்கு கைகொடுக்க ஒ.பி.எஸ் அணி தற்போது தாமாக முன் வந்துள்ளது.

இதுகுறித்து ஒ.பி.எஸ் கூறுகையில் தங்களால் அதிமுக ஆட்சி கவிழாது என வாக்குறுதி கொடுத்தார்.

அவரை தொடர்ந்து தற்போது கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசின் ஆட்சி எப்போதும் கவிழாது எனவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!