தினகரனை மாட்டிவிட்ட சுகேஷுக்கு மேலும் சிக்கல் - மற்றொரு மோசடியில் விசாரணை

First Published Jun 8, 2017, 11:57 AM IST
Highlights
More trouble for Sukesh who was stuck on the day - another fraud investigation


திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், பண மோசடி வழக்கில் கோவை நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகிறார்.
இரட்டை இலை சின்னம் பெற்று தருவதாக டிடிவி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இவருக்கு இடை தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரா என்பவரையும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், கோவையை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேலு என்பவரிடம், அரசின் ஒப்பந்தம் பெற்று தொழிலை மேம்படுத்துவதாக சுகேஷ் சந்திரா கூறியுள்ளா. இதற்காக ரூ.2.43 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதையொட்டி ராஜவேலு கோவை மாநகர போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், ரயில் மூலம் கோவைக்கு கொண்டு வரப்படுகிறார்.
இந்த வழக்கின் விசாரணையில், அவர் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டால், அவர் கோவை சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.
மேலும், அவர் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து விசாரிக்க, போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
 

click me!