நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் - அதிரடியாக களத்தில் குதிக்கிறார் ஓபிஎஸ்

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் - அதிரடியாக களத்தில் குதிக்கிறார் ஓபிஎஸ்

சுருக்கம்

ops team campaign in rk nagar

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் களம் இறங்குகின்றனர்.

இந்த இரு தரப்பில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது இன்று மாலைக்குள் தெரியவரும். இது தொடர்பான விசாரணை டெல்லி தேர்தல் ஆணையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், நாளை காலை 10 மணிக்கு, மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாலை தேர்தல் பணிமனைகள் தொடங்கப்பட்டு நாளை மாலையே தேர்தல் பிரச்சாரம் தொடங்கவுள்ளதாகவும் பாண்டியராஜள் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அனைத்து மண்டல பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றும், பிற அமைப்புகளுடன் பேச குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் ஜெயலலிதா தலைமையில் எப்படி அதிமுக கட்டுக்கோப்பாக செயல்பட்டதோ அதுபோல தற்போது தங்களது அணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு வரம் இந்த அணி ஓபிஎஸ் தலைமையில் நாளை அதிரடியாக களமிறங்குகிறது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!