ஓபிஎஸ்-ஐ ஓரம்கட்ட நினைத்தால் அழிவுப்பாதையில் முடியும்.. எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் ஓபிஎஸ் ஆதரவளர்கள்!

By manimegalai aFirst Published Oct 27, 2021, 11:43 AM IST
Highlights

ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்திருக்க வேண்டும். இரண்டு நாட்களாகியும் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்திருக்க வேண்டும். இரண்டு நாட்களாகியும் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

சசிகலாவின் அரசியல் காய் நகர்த்தல்கள் அதிமுக-வில் மீண்டும் பூகம்பத்தை உண்டாக்கியுள்ளது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அவருக்கு ஆதரவாக பேசிய பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி அணியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சித் தலைவர்கள் மீடியாக்களில் வெடித்துவரும் நிலையில் தொண்டர்களும் இரண்டாக பிளவுற்று சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பன்னீர்செல்வத்தை எடப்பாடி ஆதரவு தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்தநிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள் என ஓ.பி.எஸ். பேசியதில் எந்த தவறும் இல்லை. இதற்காக அவரை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே இரண்டு முறை இதேபோல் பேசியிருக்கிறார். தற்போது பன்னீர்செல்வத்தை விமர்சித்த கட்சி நிர்வாகிகள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தேவையில்லாமல் ஓபிஎஸை விமர்சிப்பது கட்சியை பலவீனப்படுத்தும். இது தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேவையில்லாமல் பேசி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஓபிஎஸ்-ஐ ஓரம்கட்ட நினைத்தால் அது தோல்வியில்தான் முடியும். ஓபிஎஸ்-ஐ விமர்சித்தவர்களை எடப்பாடி பழனிசாமி அறிக்கைவிட்டு கண்டித்திருக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக அவரிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளிவராததால் தான் நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். ஓரிரு தினங்களில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூடி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

click me!