
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதிமுக எஃகு கோட்டை கூறி வந்த நிலையில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால், அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 11ம் தேதி பொதுக்குழு நடத்தப்படும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் முயற்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- AIADMK: எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !
இந்நிலையில், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை வைத்தியலிங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதையும் படிங்க;- தன்னை சந்திக்க வந்த செங்கோட்டையனை திருப்பி அனுப்பிய எடப்பாடியார்.. என்ன காரணம் தெரியுமா?
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் சபாநாயகர் தனபால், எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தன்னைதத்ததானே தனிப்படுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.