கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் குற்றம்சாட்டியதோடு ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் குற்றம்சாட்டியதோடு ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ளது. அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் வெற்றிபெற, அதிமுகவின் தொண்டர்கள் உழைக்கிறார்கள், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: பேராசிரியர்களுக்கு 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பெரும் அநீதி..! அரசுக்கு எதிராக சீறும் ராமதாஸ்
அவர் மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கேபி முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி, முதலில் ஐம்பது தயார் செய்துள்ளேன், மாலைக்குள் மீதி ஐம்பதை தயார் செய்கிறேன் என்று கூற, கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு இது தெரிய வேண்டாம்.
இதையும் படிங்க: பிரசாரம் என்ற பெயரில் அமைச்சர்கள் கோமாளித்தனமாக செயல்படுகிறார்கள் - ஜெயகுமார் காட்டம்
பணத்தை பெற்றுக்கொள்ள என் மகனை அனுப்புகிறேன் என்றார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கேபி முனுசாமி என்னிடம் ரூ. 1 கோடி கேட்டார், இதுதொடர்பாக கேபி முனுசாமி ஆடியோவை இப்போது வெளியிட்டுள்ளேன், ஓபிஎஸ் அண்ணனை கே.பி.முனுசாமி தரம் தாழ்ந்து பேசுகிறார். அதனால் இதை வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி பற்றி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும். இந்த ஆடியோவுக்கு பதில் தராவிட்டால் விடியோவையும் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.