பேராசிரியர்களுக்கு 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பெரும் அநீதி..! அரசுக்கு எதிராக சீறும் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Feb 16, 2023, 2:26 PM IST

பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர்களுக்கு  3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பெரும் அநீதி என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்  உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  


பாரதியார் பல்கலைக்கழகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு 3 ஆண்டுகாலமாக வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக பணியாற்றியவர்களுக்கு  மூத்த பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

Tap to resize

Latest Videos

புதுவையில் அடுத்தடுத்து செத்து மடிந்த 400 வாத்துகள்; காவல் துறை விசாரணை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக பணியாற்றியவர்களுக்கு மூத்த பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக 14 பேராசிரியர்களிடமிருந்து 25.04.2019ல் விண்ணப்பம் பெற்று 4 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை!(1/4)

— Dr S RAMADOSS (@drramadoss)

 

இதற்காக 14 பேராசிரியர்களிடமிருந்து 25.04.2019ல் விண்ணப்பம் பெற்று 4 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை! உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நிலையில் பேராசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படாதது நியாயமல்ல. இதில் செய்யப்படும் தாமதத்தால் கடந்த 4 ஆண்டுகளில் 10 பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே  ஓய்வு பெற்று விட்டனர்!

 பதவி உயர்வு வழங்கிடுக

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்றைய நிலையில் ஒரு மூத்த பேராசிரியர் கூட  இல்லை. மூத்த பேராசிரியர் என்பது கிடைப்பதற்கரிய பெருமை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும்.  தகுதியுள்ள பேராசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதை தடுப்பது அநீதி!  7 பேர் கொண்ட தேர்வுகுழுவுக்கு மாநில அரசின் பேராளர் நியமிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக பேராளரை  நியமித்து, மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை- திருமாவளவன்

click me!