இன்னும் கொஞ்ச நாளில் ஆட்சி மாற்றம் உறுதி ….ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அதிரடி…

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 05:57 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
இன்னும் கொஞ்ச நாளில் ஆட்சி மாற்றம் உறுதி ….ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அதிரடி…

சுருக்கம்

ops mspeech

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் உறுதியாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ் அதிரடியாக தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து சென்னை  ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிமுகவில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே நிகழ்ந்த அதிகார சண்டையில் இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை கோட்டை விட்டனர். இதற்கான உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம், அதிமுக என்ற கட்சியின் பெயரை கூட பயன்படத்தக்கூடாது என தெரிவித்தது.

இதையடுத்து சசிகலா தரப்பினர் சார்பில் ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் மின் கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில்அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி  வேட்பாளர் இ.மதுசூதனை ஆதரித்து ஓபிஎஸ்  கொருக்குப்பேட்டை பாரதி நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர்,ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் போராடி வருவதாக தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும்

ஒரிரு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி எஙன்றும் தெரிவித்தார். அதற்குப் பின்னர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நேரு குடும்பத்தில் டும் டும் டும்.. காதலியை கரம் பிடிக்கும் பிரியங்கா காந்தி மகன்.. யார் இந்த அவிவா பெய்க்?
இபிஎஸ் பேசும்போது அதிர்ச்சி.. பக்கத்தில் மயங்கி சரிந்த மா.செயலாளர்.. பதறிய தொண்டர்கள்.. என்ன நடந்தது?