தேனியா... விருதுநகரா..? வைகோவுக்கு டஃப் கொடுக்கப்போகும் ஓபிஎஸ் மகன்..!

By Asianet TamilFirst Published Feb 19, 2019, 4:20 PM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருதுநகர் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருதுநகர் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முடிவு செய்திருக்கிறார். ரவீந்திரநாத் விருப்ப மனு வாங்கியபோதே, அதை அமமுகவினர் சர்ச்சையாக்கினர். அதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ்.,‘அதிமுக உறுப்பினர் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட அவருக்கு உரிமை உண்டு’ என்று தெரிவித்திருந்தார். இதனால், ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று அதிமுகவினர் பேசிவருகிறார்கள். 

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய ரவீந்திரநாத்தை வாழ்த்தி, அவரது விசுவாசிகள் ‘தேனி டூ டெல்லி’ என்ற போஸ்டரை ஒட்டி பரபரப்பை கிளப்பினார்கள். ஆனால், தற்போது தேனியில் ரவீந்திரநாத் போட்டியிடுவது சந்தேகம் என்று உள்ளூர் அதிமுகவினர் கூறுகிறார்கள். தேனி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால், அந்தத் தொகுதியில் ஆருண் போட்டியிட்டு சிறுபான்மையினர் ஓட்டுகளைப் பெற்றுவிடுவார் என்பதாலும் பெரும்பான்மையாக உள்ள கள்ளர் சமூக ஓட்டுகளை அமமுகவின் தங்கத்தமிழ்செல்வன் கைப்பற்றிவிடுவார் என்பதாலும் தேனி தொகுதியில் போட்டியிட்டால் சரியாக இருக்குமா என்று ஓபிஎஸும் ரவீந்திரநாத்தும் தீவிர யோசனையில் மூழ்கியிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஒரு வேளை தேனியைல் போட்டியிடாமல் போனால், விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாம் என்ற எண்ணமும் இருவரிடமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே விருதுநகரிலும் ரவீந்திரநாத் விருப்ப மனு வாங்கி அளித்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர்.

விருதுநகரில் திமுக போட்டியிடாமல், காங்கிரஸ் அல்லது மதிமுகவுக்கு தொகுதியைக் கொடுக்கும் என்பதால், அங்கே எளிதாகப் பெற்றி பெறலாம் என்று ஓபிஎஸ் கணக்குப் போடுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில் விருதுநகரில் தொகுதி ஒதுக்கினால், உள்ளூர் அதிமுகவினர் அதை ஏற்பார்களா என்ற யோசனையிலும் இவர்கள் மூழ்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

click me!