"நாங்கள் எக்ஸ்பிரஸ் ரயில்...திமுக சரக்கு ரயில்"... டைமிங்கில் ரைமிங்கா பேசும் அமைச்சர் ஜெயக்குமார்..!

By ezhil mozhiFirst Published Feb 19, 2019, 3:51 PM IST
Highlights

பாமக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து இன்று கூட்டாக சேர்ந்து இரண்டு கட்சிகளும் அறிக்கை வெளியிட்டனர். இது குறித்த விமர்சனம் தற்போது தமிழக அரசியலில் சூடு பிடித்துள்ளது.

"நாங்கள் எக்ஸ்பிரஸ் ரயில்...திமுக சரக்கு ரயில்... டைமிங்கில் ரைமிங்கா பேசும் அமைச்சர் ஜெயக்குமார்..!  

பாமக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து இன்று கூட்டாக சேர்ந்து இரண்டு கட்சிகளும் அறிக்கை வெளியிட்டனர். இது குறித்த விமர்சனம் தற்போது தமிழக அரசியலில் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தான் மேற்கொண்டுள்ள கிராம சபா கூட்டத்திற்கு நடுவே, ஆம்பூரிலிருந்து அதிரடியாக கூட்டணி குறித்து பதிலடி கொடுத்து உள்ளார். அப்போது, "அதிமுக  பாமக ஏற்கனவே தோற்றுப்போன கூட்டணி என்றும், ஏற்கனவே அதிமுக உடன் கூட்டணி வைத்து என்ன சாதனை செய்தது பாமக என பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

பின்னர், இதற்கும் பதில் கொடுக்கும் வண்ணமாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சில கருத்துக்களை முன் வைத்து உள்ளார். அதன் படி,"நாடாளுமன்ற தேர்தலுக்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என்றும், கூட்டணி விவகாரத்தில் அதிமுக தெளிவாக உள்ளது..கூட்டணி விஷயத்தில் எந்த தாமதமும் இல்லை.

"நாங்கள் எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம்..திமுக சரக்கு ரயில் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது" என அவருக்கு உண்டான பாணியில் பதில் கொடுத்து உள்ளார். 

click me!