பதவிவெறி பிடித்த மனிதனே தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார்.
பதவிவெறி பிடித்த மனிதனே தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், காலைப் பிடித்து பதவி வாங்கி, பதவி வாங்கி பணத்தை சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, தொடர் எட்டு தேர்தல் தோல்விகளால் மக்கள் பாடம் புகட்டினாலும், தனது சுயநலமே பெரிதான கருதி இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த மனிதனே.
இதையும் படிங்க: உங்களுக்கு நீதி கிடைக்கும்! சத்யமேவ ஜெயதே! ராகுல் காந்திக்கு ஆதரவாக கமல் ட்வீட்
தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும் பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மை தன்மை புரியவரும். தான் செய்தது தவறு என்று தெரிய வரும். அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். கடைக்கோடி உண்மை தொண்டன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் திட்டங்கள், வாக்குறுதிகள் எல்லாமே வெறும் அறிவிப்புக்களோடு நின்றுவிடும்... அண்ணாமலை விமர்சனம்!!
காலைப் பிடித்து பதவி வாங்கி,
பதவி வாங்கி பணத்தை சேர்த்து,
சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி,
கூட்டத்தை வைத்து பதவி பெற
நீதியை நிதியால் வளைத்து,
பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி,
இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக்…