அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளை அள்ளிச் சென்ற ஓபிஎஸ்...? போர்க்களமான தலைமை அலுவலகம்

Published : Jul 11, 2022, 09:37 AM ISTUpdated : Jul 11, 2022, 10:12 AM IST
அதிமுக அலுவலகத்தில் இருந்து  முக்கிய கோப்புகளை அள்ளிச் சென்ற ஓபிஎஸ்...? போர்க்களமான தலைமை அலுவலகம்

சுருக்கம்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த ஓபிஎஸ் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இபிஎஸ் ஆதரவாளர்கள் சென்ற நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதிக்கு சென்ற போது இபிஎஸ் ஆதரவாளர்கள் கூடி இருந்தனர். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை உள்ளே நுழைய முடியாத படி பாரிகேட்களை அமைத்து இருந்தனர்.

இப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகம் உள்ள சாலையில் செல்ல முற்பட்டனர். அப்போது இபிஎஸ் தரப்பு கற்களை கொண்டு தாக்கியது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பும் பதிக்கு தாக்குதலில் ஈடுபட்டது. இதன் காரணமாக  ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சால போரக்களம் போல் காணப்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. தொண்டர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் உள்ளே சென்று ஜெயலலிதாவின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்குள் சென்று ஜெயலலிதா  ஸ்டைலில் இரட்டை இலை சின்னத்தை காண்பித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

 

இந்தநிலையில் அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றி சென்றாதக தகவல் பரவியுள்ளது. இதற்கான புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதே போல இபிஎஸ் தரப்பும் ஆவணங்களை எடுத்து சென்றதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!