"ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை" - சூளுரைக்கும் ஓபிஎஸ்

 
Published : Apr 01, 2017, 02:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
"ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை" - சூளுரைக்கும் ஓபிஎஸ்

சுருக்கம்

ops says that he will not joining with stalin

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வதாக அம்மா அதிமுக கட்சி பொதுச் செயலாளர் சசிகலா குற்றஞ்சாட்டி இருந்தார்.  பன்னீர்செல்வம்  திமுகவின் பினாமி அணி என்றும் விமர்சனம் எழுந்தது.  

இது இப்படி இருக்க ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் காட்சிகள் அனைத்தும் மாறிப் போயின. ஓ.பன்னீர்செல்வம் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்தச் சூழலில் ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் தமக்கு இல்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்