
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதை அவர், இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதித்தது உண்மை. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து உடல் நலம் தேறினார். சரியாக 19ம் வதுநாள், அவர் தனது முதலமைச்சரின் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்தார்.
இதை தொடர்ந்து, அனைத்து ஆவணங்களையும் பார்த்தார். கோப்புகளை ஆய்வு செய்து, எங்களுக்கு துறைகளில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு உத்தரவிட்டார். நாங்களும் அவரது, உத்தரவை ஏற்று நடந்தோம்.
ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது இதனால் அமெரிக்கா போகலாம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக கூறி வருகிறார். அதை நாங்கள் மறுத்ததாகவும் கூறுகிறார்.
நாங்கள் மறுத்ததாக கூறினால், கவர்னர் வித்யாசாகர் ராவ் மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் ஏன், இதுபற்றி கூறவில்லை. அதேபோல் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, அமித்ஷா, அருண்ஜெட்லி ஆகியோரும் வந்தார்கள். அவர்களிடம் ஏன் கூறவில்லை.
தேர்தல் வந்தவுடன், அவர் மனம் குழம்பி, எல்லோரிடமும் புலம்பி வருகிறார். அவருக்கு பதவி, ஆட்சி, அதிகாரம் எல்லாமும் போய்விட்டது. இதனால், அவர் விரக்தியில் இருக்கிறார்.
அவரிடம் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு புலுகு மூட்டையை அவிழ்த்துவிடுகிறார். அதே ஓ.பன்னீர்செல்வம், தமிழரவி மணியனிடமோ அல்லது பழ.கருப்பையாவிடமோ பதில் கூறமுடியுமா.
ஆர்கே நகர் தேர்தல் வருவதால், மனதுக்குள் தோல்வி பயம் வந்துவிட்டது. அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவரிடம் மக்கள் கேள்விகளை கேட்க வேண்டும்.
எங்களுக்கு பணம் கொடுத்து ஆர்கே தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கான நிலையும் இல்லை. ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் பல இருக்கின்றன. அதை நிறைவேற்றி இருக்கிறோம். அதுவே நாங்கள் வெற்றி பெறுவதற்கு, போதுமான சான்றிதழ்.
மக்களை ஜெயலலிதாவை நம்பினார்கள். இப்போதும் நம்புகிறார்கள். அதுவே நாங்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது, அவர் கூறியதை நாங்கள் கேட்கவில்லை என்பது வியப்பாக உள்ளது. இதனை அவர் முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.