முஸ்லிம்களின் வாக்குகளை கவர புது உத்தி : குல்லா அணிந்து பள்ளிவாசலுக்கு படையெடுத்த தினகரன்!

Asianet News Tamil  
Published : Apr 01, 2017, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
முஸ்லிம்களின் வாக்குகளை கவர புது உத்தி : குல்லா அணிந்து பள்ளிவாசலுக்கு படையெடுத்த தினகரன்!

சுருக்கம்

dinakaran put kulla for attracting muslims

எந்தெந்த இன மக்கள் எங்கெங்கு வசிக்கிறார்களோ, அந்தந்த இடத்திற்கு அவரவர் மனம் கவரும் வகையில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார் தினகரன்.

வெள்ளிக்கிழமையான நேற்று, முஸ்லிம்கள் தொழுகையை முடித்து வெளியே வரும்போது, பள்ளிவாசலில் நின்று அவர்களிடம் வாக்கு சேகரித்தார் தினகரன்.

அதற்காக, வழக்கமாக தாம் போட்டிருந்த தொப்பியை கழற்றி எறிந்துவிட்டு, முஸ்லிம் குல்லாவுடன் பள்ளிவாசலில் நின்றிருந்தார் தினகரன்.

அப்போது, தொழுகை முடித்துவிட்டு வந்த முஸ்லிம்களிடம்,  இஸ்லாமிய  மக்களின் புனிதமான குல்லாதான் எனக்கு சின்னமாக கிடைத்திருக்கிறது.

அந்த நபிகள்நாயகமே ஆசிர்வாதம் செய்துதான் எனக்கு இந்தச் சின்னத்தை வழங்கி இருக்கிறார் என்று  நான் நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும்.

இது என்னுடைய  சின்னம் இல்லை. உங்கள் சின்னம்...’ என்றெல்லாம் சென்ட்டிமெண்ட் ஆக அவர்களிடம் மனமுருக பேசினார். அவர்களும் மரியாதை நிமித்தமாக, தினகரனிடம் பேசினார். 

அதையடுத்து, முஸ்லீம் மக்களின் வாக்குகள் இந்த சின்னத்துக்காகவாவது தமக்கு  கிடைக்கும் என்று அவர் நம்பிக்கையோடு, தினகரன் அங்கிருந்து புறப்பட்டார். 

அநேகமாக, ஞாயிற்றுக்கிழமையான நாளை, அவர் தொகுதியில் உள்ள முக்கிய தேவாலயம் ஒன்றில் அவர் கிறிஸ்தவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!