நாம் ஒன்றினைந்தால் எதிர்த்து நின்று வெற்றி பெற யாரும் இல்லை.! அதிமுக ஆட்சியை அமைய இன்று பிள்ளையார் சுழி-ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jun 7, 2023, 2:32 PM IST

மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலர செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மை வெல்ல இந்தியாவிலே யாரும் இல்லையென ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 


ஒரே மேடையில் 6 ஆண்டுக்கு பிறகு

தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளரும்  ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மகன் இல்ல திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இருவரும் இணைந்து நடத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி பேசிய டிடிவி தினகரன், 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகள் ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சி. இன்று திருமணம் மற்றும் இணைப்பு விழா மகிழ்ச்சி என இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. பழைய நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி. இதற்காக வைத்திலிங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமுமுக - அதிமுகவுடன் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது. இந்த இணைப்பு துரோகிகளுக்கு பாடம் கற்பித்து, திமுகவை அகற்றி, எந்த மனமாற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்

இதனை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்,. அவரது மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கட்டுகோப்புடனும், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும் வழி நடத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்.ஜி.ஆர் வழியில் நிலை நிறுத்தியவர் ஜெயலலிதா. பல்வேறு சோதனைகள், சதி வலைகளை உடைத்து மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் அது ஜெயலலிதாவால்தான்.  அதிமுகவை எக்கு கோட்டையாக ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.  அ.தி.மு.க.வின் தூய தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். இதேபோல தமிழக மக்களின் எண்ணமும் ஒன்றினைய வேண்டும் என்பது தான் . 

நம்மை வெல்ல இந்தியாவிலே யாரும் கிடையாது

தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி. பல்வேறு கருத்து வேறுபாடு இருந்தாலும் இன்றைய சூழ்நிலை சட்ட விதிகளுக்கு ஊரு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளால் இருந்தாலும் அனைவரும் ஒன்றினைந்து இயங்க வேண்டும் என்றுதான் அனைத்து இதயங்களும் ஏங்கி  கொண்டுள்ளது.  மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலர செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மை வெல்ல இந்தியாவிலே யாரும் கிடையாது என்பதை ஏற்படுத்த வேண்டும்.  அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று தஞ்சாவூரில் போடப்பட்டுள்ளது. தஞ்சையில் எது செய்தாலும் வெற்றி தான். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஜெயலலிதா ஆன்மாவின் எண்ணமாக இருகம் எனவும் அவர் என ஓபிஎஸ் பேசினார்.

இதையும் படியுங்கள்

ஒரு சிலரின் பண திமிரால், சுயநலத்தால் பிரிந்து நிற்கிறோம்..! ஓபிஎஸ்யோடு கைகோர்த்த டிடிவி தினகரன் ஆவேசம்

click me!