திமுக குறித்து அவதூறு பரப்பியதாக ஆர்எஸ்எஸ் பிரமுகர் திருப்பூரில் கைது

By Velmurugan sFirst Published Jun 7, 2023, 2:26 PM IST
Highlights

திமுக குறித்து பொய் செய்தி பரப்பியதாக ஆர்.எஸ்.எஸ்‌. பொறுப்பாளரை திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2021ம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் சாராயம் காய்ச்சிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் செய்தி தாள்களில் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை தவறாக சித்தரித்து 5 திமுகவினர் சாராயம் காய்ச்சிய போது கைது என புகைப்படத்தை மார்பிங் செய்து மாற்றி கடந்த 5 தினங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.  பொறுப்பாளர் சரவணபிரசாத் (52) என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சரவணபிரசாத் செய்தியை திரித்து மார்பிங் முறையில் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கில்  பொய்யான செய்தியை பதிவிட்டது தெரியவந்தது. 

லெஸ்பியன் மோகத்தால் இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த குடும்ப பெண்; பரிதவிப்பில் 3 குழந்தைகள்
 

இதனை தொடர்ந்து கோவையில் இருந்த சரவணபிரசாத்தை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

click me!