பாஜகவில் இணைந்த மைத்ரேயன் குறித்து ஒரே வரியில் சொன்ன ஓபிஎஸ்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

Published : Jun 10, 2023, 01:14 PM ISTUpdated : Jun 10, 2023, 01:18 PM IST
பாஜகவில் இணைந்த மைத்ரேயன் குறித்து ஒரே வரியில் சொன்ன ஓபிஎஸ்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

சுருக்கம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு தாவினார். ஆனால், அவருக்கு முக்கியத்துவம் அளிக்காததால் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கே திரும்பினார். 

தமிழ்நாட்டில் அனுமதி அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு ஆணைக்கட்ட முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு தாவினார். ஆனால், அவருக்கு முக்கியத்துவம் அளிக்காததால் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கே திரும்பினார். 

இதையும் படிங்க;- அதிமுக முன்னாள் எம்.பி.யை தட்டித்தூக்கிய பாஜக.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

இதன் காரணமாக கடந்த ஆண்டு அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்து வந்த மைத்ரேயன் திடீரென கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். இந்நிலையில்,  டெல்லியில் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- தமிழ்நாடு முழுவதும் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேகதாது அணை விவகாரம் குறித்து ஏற்கெனவே விரிவான அறிக்கை கொடுத்துள்ளேன். தமிழ்நாடு அரசின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது. இதுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது என்றார். 

இதையும் படிங்க;-  1 நாள் முன்பே தமிழகம் வரும் அமித்ஷா.. அண்ணாமலையுடன் மீட்டிங்! இபிஎஸ் - ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மைத்ரேயன் எங்கிருந்தாலும் வாழ்க என்று ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!