
சென்னை மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார்.
திருவள்ளுவர் திருநாளான இன்று, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மெரினா கடற்கடையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமீன், கடம்பூர் ராஜு, உள்ளிட்ட அமைச்சர்கள்,தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் விருதாளர்களுக்கு விருது, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதைப்போல் புதுவை மாநிலத்தில் அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலைக்கு பாண்டிச்சேரி முதல்வர் நாரயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.