திமுக ஆட்சியை கலைக்க மறுத்த ஜனநாயகவாதி, முன்னாள் ஆளுநர் பர்னாலா மரணம்

First Published Jan 14, 2017, 6:11 PM IST
Highlights


 தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். தமிழக ஆளுநராக இரண்டு முறை பதவி வகித்த பர்னாலா 1991 ஆம் ஆண்டு  சுப்ரமணியம் சுவாமியின் தூண்டுதலால் திமுக ஆட்சியை  கலைக்க சொன்னபோது ,  மறுத்ததால் வேறு  பிரிவின் கீழ்  ஆட்சியை கலைத்தனர்.
இதனால் கருணாநிதியின் அன்புக்குரிய நண்பராக விளங்கியவர். ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் பர்னாலா. 91 வயதாகும் பர்னாலா உடல்நலக்குறைவு காரணமாக சண்டிகரில் உள்ள மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தார்.
வாழ்க்கை குறிப்பு:
அரியானா  மாநிலத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் பர்னாலாலா, அரியானா மாநிலம் அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளி படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க லக்னோ சென்று லக்னோ பல்கலைகழகத்தில் 1946 ம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார்.
 அவர் 1942 ம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத்தொகுதி உறுப்பினராக 1999 ம் ஆண்டு வரை இருந்தார். 1969 ம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். அமிர்தசரஸிலிருக்கும் குரு நானக் தேவ் பல்கலைகழகம் அமைந்ததில் இவருடைய சேவை குறிப்பிடத்தக்கது.
 1977 ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985 ம் ஆண்டு சிரோமணி அகாலி தள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.
1990 ம் ஆண்டு தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மக்களவை உறுப்பினராக 1996 மற்றும் 1998 ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார்.
இந்திய நாட்டு பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவை போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.
 1988 ம் ஆண்டு இவருடைய ஓவியங்கள் பாட்டியாலா பல்கலைகழக கலைக்கூடத்தில் கண்காட்சியாக்கப்பட்டது. உத்தராஞ்சல் மாதில ஆளுநராக 2000 முதல் 2004 வரையிலும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2003 முதல் 2004 வரையிலும் இருந்தார்.
தமிழ் நாடு அரசு ஆளுநராக 03. 11. 2004 அன்று முதல் ஏழாண்டுகள் பதவி வகித்துள்ளார்.

click me!