ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு.. பதற்றத்தில் பன்னீர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2022, 4:39 PM IST
Highlights

ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது காலியாகி விட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது காலியாகி விட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே பொதுக்குழுக் கூட்டபடுவதாகவும், இதை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அபராதத்துடன் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

14ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அது விசாரணைக்கு வந்த நிலையில் அதன் மீது காரசாரமான விவாதம் நடந்தது. இதனை அடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இணை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன்பாக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். பொதுக்குழுவுக்கானா அழைப்பிதழில் யார் யார் கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியது உடன் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

பின்னர் வழக்கு விசாரணை (இன்று) வெள்ளிக்கிழமைக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை இன்று பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது, அதில் இரு தரப்பின் காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது, மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:- ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டலாம், அதற்கு யாருடைய அனுமதியும் பெற தேவையில்லை, வரும் 11ம் தேதி சிறப்பு பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டிஸ் அனுப்பியதாக கூறுவதை ஏற்க முடியாது.

வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், ஆனால் 20 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட கோரினால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை நடத்தலாம். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

ஐந்தில் ஒரு பங்கு பொதுக் குழு உறுப்பினர்கள் கோரியதால் 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தலாம் அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை, ஜூன் 23 நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் என அறிவிக்கப்பட்டது, வரும் 11 ஆம் தேதிக்கான சிறப்பு பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக கூறுவது ஏற்க முடியாது.

பொதுக்குழு தான் கடைசி அதிகாரமிக்க அமைப்பு, அதில முடிவும் ஒப்புதலும் பெற வேண்டியது அவசியம். ஓபிஎஸ் நடவடிக்கையால் கட்சியில் உள்ள அனைவரும் அவருக்கு எதிராக உள்ளனர், செயற்குழு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்தபோதும் பொதுக்குழுவில் முன்வைத்து ஒப்புதல் பெறவும் தீர்மானிக்கப்பட்டது, 2017 இல் நடந்த பொதுக்குழுவில் தான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி விலகினாலும் அவர்களால் நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் 74 பேர் புதிய தலைமையை நியமிக்கும் வரை செயல்படுவார்கள். கட்சி நிர்வாகிகளின் மூலம்தான் 2016இல் சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 

பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய பன்னீர்செல்வம் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு தொடர்ந்ததில் பன்னீர்செல்வத்தின் உள்நோக்கம் என்ன என்று பழனிச்சாமி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பிரச்சனைகள் குறித்து பொதுக்குழுவில் தான் பன்னீர்செல்வம் வைத்திருக்கவேண்டும் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணமுடியாது, இந்தியாவிலேயே சில கட்சிகளில்தான் உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது, மொத்தத்தில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்கு கட்சி நலனுக்கான வழக்கே அல்ல, தனி நபர் நலனுக்கான வழக்கு, அதிமுகவை பொறுத்தவரை அனைத்துமே பொதுக்குழு தான் பொதுக்குழுவை உச்சபட்ச அதிகாரமிக்கது.
 

click me!