அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்

By Raghupati R  |  First Published Jul 8, 2022, 3:32 PM IST

11ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ். பொதுக்குழு நடக்க வேண்டும். அதற்கு தடை விதிக்க கூடாது என்று ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் மோதி கொண்டு வருகிறது.


ஒற்றை தலைமை விவகாரம்

வருகின்ற 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.  கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளரும்,  இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரம் இருக்கிறது.  வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதால் 11ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.  

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

பொதுக்குழு நடக்க வேண்டும். அதற்கு தடை விதிக்க கூடாது என்று ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் மோதி கொண்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள திருப்புலிவனம் வாசந்தா திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக பொதுக்குழு

இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவை அழிப்பதற்காக கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்கய்யா என்று வடிவேல் சொன்னது போல நிறைய பேர் கிளம்பி விட்டார்கள். முதலில் அளிப்பது கிளம்பிய தினகரனை காணவில்லை.

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை

இதில் புதிதாக ஒருவர் ஊர், ஊராக சுற்றுபயனம் சென்று வருகிறார் என்று சசிகலாவை மறைமுகமாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர்,  ஒரு பக்கம் திமுக அதிமுக அழிக்க நினைக்கிறது. இந்த மூன்று நபர்களிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதிமுக அளிப்பதற்காக ஓ. பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார் என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி

click me!