கேபி பார்க் கட்டப்பட்டதில் கமிஷன்..வசூல்ராஜா MBBS போல வசூல் ராஜா பன்னீர்.. பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்.

Published : Aug 30, 2022, 02:51 PM ISTUpdated : Aug 30, 2022, 02:57 PM IST
கேபி பார்க் கட்டப்பட்டதில் கமிஷன்..வசூல்ராஜா MBBS போல வசூல் ராஜா பன்னீர்..  பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்.

சுருக்கம்

ஓ.பன்னீர்செல்வம் சாதாரண பன்னீர்செல்வம் அல்ல அவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல வசூல்ராஜா பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம் சாதாரண பன்னீர்செல்வம் அல்ல அவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல வசூல்ராஜா பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஆனால் அத்தீர்ப்புக்குப் பின்னரும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதை உதாசினப்படுத்தி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:  நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. மாற்றுத் திறனாளியிடம் மதிமுக எம்எல்ஏ ஆணவப் பேச்சு.

இந்நிலையில்தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ்சை கடுமைய விமர்சித்து இன்று பேட்டி கொடுத்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட தேன் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார், அதன்  பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியதாவது:- 

இதையும் படியுங்கள்: தமிழக அரசின் முடிவுக்கு பல்கலைக்கழகங்கள் கட்டுப்பட வேண்டும்.! ஆளுநருக்கு செக் வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது, ஓ.பன்னீர்செல்வம் துரோகத்திற்கு பெயர் போனவர், பதவி ஆசை கொண்டவர், வெவ்வேறு துறை அமைச்சரிடம் இருந்து அவருக்கு தேவையான துறைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டு செயல்பட்டவர் தான பன்னீர்செல்வம்.

வியாசர்பாடியில் கே.பி பார்க் குடியிருப்பு கட்டிடத்தில் அதிக அளவில் கமிஷன் அடித்ததாலேயே தரமற்ற குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முழு காரணம் ஓ. பன்னீர்செல்வம்தான், அதிமுக ஆட்சியில் வேறு எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் இருந்து வந்த நிலையில், ஓ பன்னீர் செல்வத்தின் துறையில் மட்டும் ஊழல் புகார் எழுந்திருப்பதற்கு இதுவே காரணம்.  உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பன்னீர்செல்வத்தின் பெயர் உள்ளது.

சாதாரண பன்னீர்செல்வம் அல்ல, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல வசூல் ராஜா பன்னீர்செல்வம் என்றார். பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெறும் 50 பேர் மட்டுமே கலந்து  கொண்டுள்ளனர், மாவட்டத்திற்கு 10 முதல் 15 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு கூறியுள்ளனர். சசிகலா டிடிவி தினகரனுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறிய பன்னீர்செல்வம் துரோகம் செய்வதில் கைதேர்ந்தவர். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!