அதிமுக வழக்கின் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ்க்கு மற்றொரு அதிர்ச்சி.. அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்..!

Published : Feb 23, 2023, 12:48 PM IST
 அதிமுக வழக்கின் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ்க்கு மற்றொரு அதிர்ச்சி.. அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்..!

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தயாரின் உடலை செய்தி அவருக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(90). இவர், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழனியம்மாளுக்கு திடீரெனெ உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஓபிஎஸ் உடனடியாக போடியில் இருந்து தேனி வந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு உள்ள தாயாரை நேரில் சென்று பார்த்து மருத்துவரிடம் தயாரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தயாரின் உடலை செய்தி அவருக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!