வாரணாசியில் முகாமிட்ட ஓ.பன்னீர்செல்வம்... அமித் ஷாவுடன் ரகசிய சந்திப்பு எனத் தகவல்!

By Asianet TamilFirst Published Apr 26, 2019, 8:00 AM IST
Highlights

தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் சென்ற ஓபிஎஸ், அவருடைய வெற்றிக்காக யாகங்களில் பங்கேற்றதாகச் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்த ஓபிஎஸ், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

தமிழகத்தில் 4 இடைத்தேர்தல் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுல்ள நிலையில் வாரணாசி சென்றிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம், பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றார். தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் சென்ற ஓபிஎஸ், அவருடைய வெற்றிக்காக யாகங்களில் பங்கேற்றதாகச் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்த ஓபிஎஸ், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபற்றி அதிமுக தரப்பில் விசாரித்தபோது, தேனியில் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவிக்க சென்றதாக கூறப்பட்டது. ஆனால். உண்மை அதுவல்ல என்றும் தகவல்கள் கசிகின்றன. அமித் ஷாவுடனான சந்திப்பின் போது தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டால், அதைக் காப்பாற்றவும், தினகரனின் நகர்வுகள், இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலாவின் சீராய்வு மனுக்கள் குறித்து  பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக தலைமையுடன் ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!