மோடிக்கு அல்வா கொடுத்த மம்தா ! இனிப்பு மட்டும்தான் ஓட்டு கிடையாது என பதிலடி!!

Published : Apr 25, 2019, 11:47 PM IST
மோடிக்கு அல்வா கொடுத்த மம்தா ! இனிப்பு மட்டும்தான் ஓட்டு கிடையாது  என பதிலடி!!

சுருக்கம்

பிரதமர் மோடிக்கு இனிப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பா.ஜ.க.வுக்கு ஒரு ஓட்டு கூட கிடையாது எனவும் மோடி தெரிவித்த கருத்துக்கு மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்

பிரதமர் மோடி நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவரை பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் பேட்டி கண்டார். அப்போது மோடி தனது வாழ்க்கை பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

பேட்டியின் போது, ஒவ்வொரு அரசியல் தலைவர்களுடன் நட்பு குறித்து பேசினார். இதில் மேற்கு வங்காள முதலமைச்சர்  மம்தா பானர்ஜி பற்றி குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி தனக்கு குர்தா மற்றும் இனிப்புகளை அனுப்புவார் என்று கூறினார்.

இதற்கிடையே பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு மம்தா பானர்ஜி பதில் அளித்தார். அவர் ஹுக்ளி பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசும் போது, விருந்தினர்களுக்கு இனிப்புகள் பரிசுப் பொருட்கள் கொடுத்து வரவேற்பது மேற்கு வங்காளத்தின் கலாச்சாரம். ஆனால் மோடியின் பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட கொடுக்க மாட்டோம் என்று பேசினார்.

மோடி தெரிவித்த கருத்துக்கு மம்தா பதிலடி கொடுத்து இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!