வாரணாசியை மிரட்டிய பிரதமர் மோடி ! கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தி கெத்து காட்டிய பாஜக!!

By Selvanayagam PFirst Published Apr 25, 2019, 11:05 PM IST
Highlights

வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாளை  வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி  உத்தர பிரதேசத்தில் பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி வாரணாசி கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.

வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதையொட்டி மோடி  நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று அவர் வாரணாசியில் மிகப் பெரிய பேரணியை நடத்திக் காட்டினார்.

இன்று உத்தர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய இந்த கெத்தான பேரணிதான் இன்று இந்தியாவின் ஹாட் டாபிக் என்று சொல்லலாம்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ இந்த பேரணி நடந்தது. மாலை 5 மணியளவில் மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செய்த மோடி இந்த பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி ங்கை நதி தீரம் வரை நடைபெற்றது.

பேரணி செல்லும் வழியில் பல லட்சம் தொண்டர்கள் மோடியை காண்பதற்காக நின்று இருந்தார்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி வாரணாசி கங்கை நதியில் வழிபாடு நடத்தினார். சுமார் 30 நிமிடம் பிரதமர் மோடி அங்கு கங்கை நதியை வேண்டினார்


.
இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக தொண்டர்கள் பல லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நாளை மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

click me!