ஓபிஎஸ் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதியா? வெளியானது டெஸ்ட் ரிப்போர்ட்..!

By vinoth kumar  |  First Published Jul 16, 2022, 10:42 AM IST

லேசான காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஓபிஎஸ் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் ஓபிஎஸ் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. 


ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று இல்லை. லேசான காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை ஈடுபட்டு வந்தார்.  இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த சில நாட்களாகவே உடல் சோர்வாக காணப்பட்டு வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

undefined

இதையடுத்து, ஓரிரு தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வு, காய்ச்சல் காரணமாக அவர் சென்னையில் அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்திகள் வெளியான. இந்நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.

இதையும் படிங்க;-  கோமாளி கூடாராம்.. 'எடை'யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்கும் நேரம் வந்துடுச்சு.. இபிஎஸ்ஐ இறங்கிய அடிக்கும் OPR.!

லேசான காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஓபிஎஸ் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் ஓபிஎஸ் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க;-  துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள்.. இபிஎஸ்க்கு சாபம் விடும் டிடிவி.தினகரன்.!

click me!