உங்களை பற்றி உண்மைகளை சொல்லட்டுமா.?? வெளியில தலைகாட்டவே முடியாது.. ஓபிஎஸ்சை ஓங்கி அடித்த ஆர்பி உதயகுமார்.

Published : Jul 16, 2022, 09:42 AM ISTUpdated : Jul 16, 2022, 09:47 AM IST
உங்களை பற்றி உண்மைகளை சொல்லட்டுமா.?? வெளியில தலைகாட்டவே முடியாது.. ஓபிஎஸ்சை ஓங்கி அடித்த ஆர்பி உதயகுமார்.

சுருக்கம்

ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து தன்னை மிரட்டினால் அவர் குறித்த பல உண்மைகளை வெளியிட நேரிடும் என்றும், பிறகு அவர் வெளியே தலை காட்டவே முடியாது என்றும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து தன்னை மிரட்டினால் அவர் குறித்த பல உண்மைகளை வெளியிட நேரிடும் என்றும், பிறகு அவர் வெளியே தலை காட்டவே முடியாது என்றும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிமிடம் வரை அவரை அண்ணனாக மதித்து ஓபிஎஸ் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளார், அதுமட்டுமின்றி கடந்த 11 ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு வெளியில் நடந்த கலவரத்தால், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அண்ணாமலையுடன் செல்பியா.?? வேறு வேலைய பாருங்க.. பாஜகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

இதனையடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் மாற்றி மாற்றி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகின்றனர். உண்மையிலேயே இதில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற குழப்பம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி  ஆதரவாளர்கள் கடுமையாக பேசி வருகின்றனர்.இந்த வரிசையில் ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்து ஆர் பி உதயகுமார் பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசிய விவரம் வருமாறு:-

அதிமுக  தொடங்கப்பட்ட காலம் தொட்டு, கழகத்தின் கொள்கைக்காக உழைத்த குடும்பம் எங்கள் குடும்பம், ஆனால் கோவை செல்வராஜ் எங்களது குடும்ப வரலாறு தெரியாமல் பேசி வருகிறார், அதிமுகவின் வரலாறு தெரியாத செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாள்களை வைத்துக்கொண்டு தலைமைதாங்கும் பன்னீர்செல்வத்தின் நிலைமை பரிதாபமாக உள்ளது, நான் மதுரை சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் கூட போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவன்.

அதன் பின்னர் அது ஜெயலலிதாவுக்கு தெரிந்து என்னை மாணவர் அணியில் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்தார். 2001இல் வருவாய்த்துறை அமைச்சராகி பின்னர் முதல்வராகி இப்போது அதிமுக தொண்டர்கள் எதிர்காலம் என்னவானாலும் பரவாயில்லை என கட்சி அழிப்பேன் என்று சூளுரைக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே இந்த உதயகுமாரை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்: என்னை என் கணவருடன் சேர்த்து வையுங்கள்… கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா!!

பயமுறுத்த வேண்டாம், ஓபிஎஸ் என்னை தொடர்ந்து மிரட்டி பார்க்கும் பட்சத்தில் அவர் குறித்த உண்மைகளை நான் வெளியிட நேரிடும், அப்படி செய்தால், ஓபிஎஸ் வெளியில் தலை காட்டவே முடியாத  நிலை ஏற்படும். இதுநாள் வரை அவரை ஒரு அண்ணனாக மதித்து அவரை குறித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறேன், எனவே ஓபிஎஸ் பூச்சாண்டி காட்டும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்